பொங்கல் பரிசு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      தமிழகம்
Supreme Court 27-09-2018

புதுடெல்லி : பொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் யாராவது மேல்முறையீடு செய்யலாம் என்பதால், தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பரிசு வழங்க தடை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசுடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்தது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அரசு தரப்பில் மனு

இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க அனுமதி அளித்தது. மேலும் இலவசத் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களையும் நீதிபதிகள் வழங்கினர். பொங்கல் பரிசு தொடர்பாக உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியதால், மேலும் 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்கும்.

கேவியட் மனு தாக்கல்

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பிற்பகல் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால், மாநில அரசு தரப்பு வாதத்தை கேட்காமல்  உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து