இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களை விரைவில் சாய்ப்பதே எங்கள் இலக்கு - ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டி

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      விளையாட்டு
Aaron Finch 2019 01 11

சிட்னி : இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களான தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை சாய்ப்பதே முதல் இலக்கு என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சிட்னியில் தொடங்குகிறது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆரோன் பிஞ்ச் கூறுகையில்.,

விரைவில் வீழ்த்த...

 ‘‘கடந்த 12 மாதங்களில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 133 சராசரி வைத்துள்ளார். ஷிகர் தவான் 75-ம், ரோகித் சர்மா 50-ம் சராசரி வைத்துள்ளார். ஆகவே, ஏராளமான ரன்கள் குவித்ததுடன், ஏராளமான பந்துகளை சந்தித்தவர்களும், இந்த டாப் 3 பேட்ஸ்மேன்கள்தான். ஆகவே, இவர்களை விரைவில் வீழ்த்தியாக வேண்டும். ஏனென்றால், அவர்கள் களத்தில் நின்று விரைவாக ரன்குவிக்க தொடங்கிவிட்டால், எளிதில் ஆட்டமிழக்க செய்ய இயலாது.

திசை திருப்பி விடுவார்கள்...

தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் அவரவர் இடத்தில் சிறப்பாக விளையாட முடியும். இருந்தாலும் டாப் 3 பேட்ஸ்மேன்கள்தான் முக்கியம். இவர்களையும் எளிதாக எடைபோட முடியாது. களத்தில் அவர்களுக்குரிய நாளாக அமைந்தால் ஆட்டத்தை திசை திருப்பி விடுவார்கள்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து