முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக வங்கியின் புதிய தலைவர் டிரம்ப் மகள்?

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து, புதிய தலைவராக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் அமர்த்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக் காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் பதவி விலகுவதாக திடீரென அறிவித்தார். வரும் 31-ம் தேதியன்று அவர் தனது பதவியிலிருந்து விலகுகிறார். இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இவாங்கா டிரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

இது குறித்துக் கூறிய கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர், குறிப்பிடத் தகுந்த எண்களில் தலைவர் பதவிக்காக பரிந்துரைகள் வந்துள்ளன. தகுந்த நபரைத் தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கவர்னருடன் பணியாற்ற உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாவது உலகப் போர் முடிவடையும் போது தொடங்கப்பட்ட உலக வங்கியில், அதன் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாகவே இருந்து வருகின்றனர். உலக வங்கியில் அமெரிக்கா மிகப்பெரிய பங்குதாரராக விளங்குகிறது. டிரம்ப், அவரது சொந்த விருப்பத்தில் உலக வங்கியின் தலைவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து