முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      சினிமா
Image Unavailable

நடிகை மனீஷா கொய்ராலா தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை பதிவு செய்துள்ளது . மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும், ஆனால் புற்றுநோய் பாதிப்பில் மீண்டும் வாழ்வை புரிந்து கொண்டதாக மனீஷா தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார் .  90-களின் மத்தியில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மனீஷா கொய்ராலா. இவர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்து, இங்கேயும் முன்னணி நடிகையாக இருந்தார். இவருக்கு கடந்த 2012ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. திரைத்துறையிலிருந்து விலகிய இவர், நோய் பாதிப்புக்காக சிகிச்சைகள் மேற்கொண்டு தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர், ஹீல்டு: புது வாழ்வு கொடுத்த கேன்சர்’ என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார் . அதில், ’தீராத குடிப்பழக்கத்தினால் தான் எனக்கு கேன்சர் ஏற்பட்டது. நண்பர்கள், முன்னாள் காதலர் என பலரும் எச்சரித்தும் என்னால், குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. கேன்சரால் பாதிக்கப்பட்ட நாட்கள் அவ்வளவு கொடுமையானது என்றாலும், கேன்சர் என் வாழ்க்கையின் பரிசாகவே கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.  கேன்சர் பாதிப்பில் இருந்தபோது தான் எதிர்க்கொண்ட சவால்கள் குறித்தும் அந்த புத்தகத்தில் மனிஷா கொய்ராலா பகிர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து