முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செரீனா புதிய வரலாறு படைப்பாரா ? ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மதுரை : இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில்இன்று தொடங்குகிறது.

ஜோகோவிச் (செர்பியா), ரபேல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), சிலிச் (குரோஷியா), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டொமினிக் தியெம் (ஆஸ்திரியா), நிஷிகோரி (ஜப்பான்) போன்ற முன்னணி வீரர்கள் இதில் விளையாடுகிறார்கள்.

பெடரர், நடால், ஜோகோவிச், முர்ரே ஆகியோர் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னிலையில் உள்ளனர். இந்த 4 பேரும் சேர்ந்து கடந்த 55 கிராண்ட் சிலாம் போட்டிகளில் (2015 பிரெஞ்ச் ஓபனில் இருந்து) 50 பட்டங்களை வென்று முத்திரை பதித்துள்ளனர்.இவர்களின் ஆதிக்கம் இந்த ஆண்டிலும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தலைமுறையில் உள்ள வீரர்கள் இந்த ஆண்டில் சாதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

கடந்த ஆண்டில் ஜோகோவிச் அமெரிக்க ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும், ரபெல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் ரோஜர் பெடரர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றி இருந்தனர்.பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் பங்கேற்கிறார். குழந்தை பெற்றதால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்கா ஓபனில் கலந்து கொண்டு விளையாடினார். இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார்.தற்போது வரை செரீனா 23 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்றுள்ளார். இன்னும் ஒரு பதக்கம் வென்றால் அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை மார்கரெட் உடன் பகிர்ந்து கொள்வார். இதனால் செரீனா 24-வது கிராண்ட் சிலாம் பட்டம் வென்று புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து