முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பதி ராயுடு பந்துவீச்சில் சந்தேகம்? சோதனைக்கு உட்படுத்த ஐ.சி.சி. உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

துபாய் : இந்திய அணியின் பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான அம்பதி ராயுடு பந்துவீசும் முறை சந்தேகத்துக்கு உரிய முறையில் இருப்பதால், அவரைச் சோதனைக்கு உட்படுத்த ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி வீரர் அம்பதி ராயுடு 2 ஓவர்கள் வரை பந்துவீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

இந்நிலையில், அம்பதி ராயுடுவின் பந்துவீசும் போது அவரின் செயல் பந்துவீசும் விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாகச் சந்தேகத்தை போட்டி நிர்வாகிகள் எழுப்பியுள்ளனர்.இது தொடர்பாக போட்டியின் நிர்வாகிகள் அம்பதி ராயுடுவின் பந்துவீச்சு குறித்த அறிக்கையை இந்திய அணி நிர்வாகத்திடம் அளித்து கவலை தெரிவித்துள்ளனர்.ஆதலால், இனிவரும் போட்டிகளில் அம்பதி ராயுடுவின் பந்துவீச்சு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி -20 போட்டிகளில் ஐ.சி.சி. விதிமுறைகளின்படி சந்தேகத்துக்கு உரிய வகையில் பந்துவீசுகிறாரா என ஆய்வு செய்யப்படும்.

அதுவரை ராயுடு பந்துவீசுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை.அடுத்த 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு பந்துவீசும் சோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த 14 நாட்களில் எந்தவிதமான போட்டியிலும் ராயுடு பந்துவீசுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ராயுடுவின் பரிசோதனை ஆய்வுகள் கிடைக்கும்வரை அவர் பந்துவீசவதற்கு தடையில்லை என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.46 ஓருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு இதுவரை 20.1 ஓவர்கள் பந்துவீசி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், டி - 20 போட்டியில் இன்னும் ராயுடு பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து