முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது அவதூறு குற்றச்சாட்டு: சி.பி.ஐ. விசாரணை வந்தாலும் சந்திக்க தயார் - தி.மு.க.வுக்கு செம்மலை எம்.எல்.ஏ. சவால்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றம்சாட்டப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ விசாரணையை வந்தாலும் சந்திக்க தயார் என்று தி.மு.க.விற்கு பதிலளித்து அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் மேட்டூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான செம்மலை ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிிரியில் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோவில் கொடநாடு கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகள், சயன் மற்றும் ..மனோஜ் ஆகியோர் அளித்த பேட்டியில் கொடநாடு கொள்ளையில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர். இந்த வீடியோவை கண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நொண்டிக்கு சறுக்குனது எல்லாம் சாக்கு என்கிற ரீதியில் முதல்வர் மீது சிபிஐ விசாரணை வேண்டும்.. அவர் பதவி விலகவேண்டும், இது குறித்து குடியரசு தலைவர்,ஆளுநரிடம் புகார் அளிப்போம்,வழக்கு தொடருவோம் என்றெல்லாம் பேட்டியளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடியார் சேலம் வந்தார். பின்னர் ஒமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அ்ப்போது அதில் பங்கேற்ற கழக அமைப்புச் செயலாளரும்,மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செ.செம்மலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது. .......
. தெகல்கா பத்திரிகை சமூக ஊடகம் இல்லை, அது புலனாய்வு பத்திரிக்கை.இந்த பத்திரிக்கை பிரபலங்களை பிளாக்மெயில் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது.மேலும் இந்தப் பத்திரிக்கை ஆசிரியருக்கும்

கேரளா கொடும் குற்றவாளிகளுடன்

எப்படி தொடர்பு ஏற்பட்டது. என்பது தெரியவில்லை.தமிழக முதல்வருக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்து பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருடன் இருந்த போது கொடநாடு பங்காவில் திருட, ஓட்டுநர் கனகராஜ் தங்ளது உதவியை நாடியதாக கேரளா குற்றவாளி சயன் தெரிவித்துள்ளனர். சம்பம் நடந்தது அம்மா மறைந்த பின்புதான் அதற்கு முன்பே கனகராஜ்கொள்ளைக்கு இவர்கள் உதவியை நாடியுள்ளார். என்றால் அப்போது முதலமைச்சராக இல்லாத பழனிசாமி மீது குற்றசாட்டுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்,

இவர்கள் குற்றவாளிகளாக 22 முறை கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவி்ட்டது. அப்போது எல்லாம் குற்றம் சாட்டாதவர்கள் இப்படி திடீரென குற்றம் சாட்டுகின்றனர் என்றால் இதன் பின் யாரோ இருப்பதாகதானே அர்த்தம்

இந்த வீடியோ குறித்து திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்தார். அதில் ஏதோ இவர் அருகில் இருந்து பார்த்தது போல் பேட்டியளித்துள்ளார். அவர் மத்திய அமைச்சராக இருந்த போது 2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தார். அப்போது இந்த வழக்கில் அவருக்கு நெருக்கமான சாதிக்பாட்சா என்பவர் மர்மமான முரையில் இறந்து போனார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அதன் பின் அந்த வழக்கு நீர்த்து போய் அவர் விடுதலையானார். தான் திருடி பிறரை நம்பாதவர் என்ற பழமொழி உள்ளது அதைபோல்தான் இந்த பிரச்சனையில் உள்ளது.திமுகவிற்கு இந்த ஆட்சியை அகற்ற ஏதாவது ஒரு குற்றம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களுக்கு கை வந்த கலை அவர்கள் இப்படி குற்றம் சொல்லி வழக்கு தொடர்வது,சி.பி.ஐ௤விசாரணை கோருவது இது வழக்கமான ஒன்றுதான்
தற்போது தமிழக முதல்வரும்,துணை முதல்வரும் அம்மாவின் மறைவிற்கு பின் கட்சியையும், ஆட்சியையும் அம்மா வழியில் கட்டுகோப்பாக வழிநடத்தி வருகின்றனர். மேலும்

தற்போது முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை முறியடிக்க சதி செய்து திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்.. நான் ஒரு வக்கிலாக இதனை சொல்கிறேன். நீதிமன்றத்தில் குற்றவாளிகள் வாக்குமூலம் ஏற்று கொள்ள முடியாது. எனவே இந்த கற்பனையான செய்தியை இட்டுகாட்டி பரப்புக்கின்றனர். எனவே முதல்வர் குறித்து எந்த அவதூறு பரப்பினாலும் மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் .

மேலும் பொய் செய்தி பரப்புவோர்கள் மீதும் இதன் பின்னனியில் யார் உள்ளனர் என்றும் கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தாலும் அதன் விசாரணையை சந்திக்க தயார். .இந்த ஆட்சியின் மீது குறை சொல்ல ஒன்றுமில்லை மற்றும் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த திமுக திட்டமிட்டு சதி செய்கின்றார்கள்.

இது குறித்து திமுக எங்கு சென்றாலும் நாங்கள் சந்திக்க தயார், திமுக மட்டுமல்ல தினகரன் உள்ளிட்ட யார் அவதூறு பரப்பினாலும் அதை சந்தித்து பதிலடி கொடுப்போம் இவ்வாறும் செம்மலை தெரிவித்தார்.

இந்த பேட்டியின்போது மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.,எம்.பி.க்கள் சேலம் வி.பன்னீர்செல்வம்,நாமக்கல் பி.ஆர்.சுந்தரம்,கள்ளக்குறிச்சி காமராஜ்,சட்டமன்ற உறுப்பினர்கள் வீரபாண்டி மனோன்மணி, சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல்,சங்ககிரி ராஜா,ஆத்தூர் சின்னதம்பி,ஓமலூர் வெற்றிவேல்,கெங்கவல்லி மருதமுத்து,ஏற்காடு சித்ரா,முன்னாள் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் உள்பட பலர் உடனிருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து