முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

திருமலை : பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட சந்திரபாபு நாயுடு தன்னுடைய சொந்த ஊரான நாராவாரிப்பள்ளிக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.

குடும்பத்தினருடன்...

ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு ஒவ்வொரு ஆண்டும் தனது சொந்த ஊரான சந்திரகிரியை அடுத்த நாராவாரிப்பள்ளியில் பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம்.  அதேபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட அவர், தன்னுடைய சொந்த ஊரான நாராவாரிப்பள்ளிக்கு நேற்று சென்றார். அங்குள்ள அவரின் வீட்டில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.

கிராம மக்களுடன்...

இன்று காலை சொந்த ஊரில் கிராம மக்களுடனும், உறவினர்களுடனும் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார். பின்னர் தொண்டவாடா-பீளேர் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதையடுத்து அங்கிருந்து மாலை 4 மணியளவில் புறப்பட்டு ரேனிகுண்டா வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் கண்ணவரம் செல்கிறார்.

குடிநீர் வசதிகள்...

சந்திரபாபுநாயுடு சொந்த ஊருக்கு வருவதையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள், கிராம மக்கள் நாராவாரிப்பள்ளியில் வழி நெடுகிலும் வாழை மரங்கள், தோரணங்கள், அலங்கார வளைவுகளை கட்டி உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாட நாராவாரிப்பள்ளிக்கு வரும் பொதுமக்களுக்கும், உறவினர்களுக்கும் உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து