முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் கூட்டணி குறித்து முடிவு - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பத்திரிகை ஊடகங்களில் வரும் செய்தியில் எந்த உண்மை இல்லை என்றும், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் கூட்டணி குறித்து முடிவு என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நியாயம் எங்கள் பக்கம்...

சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொடநாடு விவகாரம் நடைபெற்று முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்வதற்கு,சக்தியற்ற எதிர்கட்சிகள் தவறான அவதூறான செய்திகளை பரப்பி தேர்தலில் அரசியல் லாபம் தேடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. எந்த ரூபத்திலும் எதிர்கட்சிகளுடைய பொய்யான, தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதில் வெற்றி பெறுவோம். நியாயம் எங்கள் பக்கம் தான் இருக்கிறது.

சட்டப்படி குற்றம்...

கொடநாடு விவகாரத்தில் முதல்வர், அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர் அனைவரும் விசாரிக்கபட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார் என்றால் அது குறித்து விசாரணை வளையத்தில் உட்படுத்தி இருக்கின்ற காவல்துறை செய்யவேண்டிய செயல். யாரிடமாவது ஆதாரம் இருந்தால் காவல்துறையிடம் அளிக்கலாம். இதுபோன்று பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் தவறான தகவல்களை பரப்புவது சட்டப்படி குற்றம். ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு தெரிவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும். என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வமாக...

தேர்தல் கூட்டணி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பதிலளிக்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை உடனடியாக பேசி முடிக்கப்படும் என்றார். வரும் 18-ம் தேதி பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் சென்னை வரும்போது அவரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, இதுவரை அவரை சந்திப்பது குறித்து எந்த தகவலும் வரவில்லை. தொலைக்காட்சிகளில் தேர்தல் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் உண்மை இல்லை. அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டதும் உங்களுக்குதான் முதலில் தெரிவிப்போம் என்று பதிலளித்தார்.

கூட்டணிகள் மாறி...

தமிழகத்தில் பா.ஜ.க மலரும் என்று நினைக்கின்றீர்களா என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரவர் சார்ந்து இருக்கின்ற அரசியல் கட்சிகளின் கொள்கையை பரப்புவது வழக்கமானது தான். இதைதான் தமிழகத்தில் இருக்கின்ற கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்த கருத்துப்படி ஆண்டுதோறும் கூட்டணிகள் மாறி வருகின்றன. பா.ஜ.க எங்களுடன் கூட்டணியில் இருந்தார்கள். பின்பு தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தார்கள். மறுபடியும் எங்களிடம் வந்தார்கள். அரசியல் ரீதியாக கூட்டணி மாறுப்பட்டுள்ளன. தேர்தல் வரும் நேரத்தில் எதுவும் நடக்கலாம். பத்திரிகை ஊடகங்களில் வரும் செய்தியில் எந்த உண்மை இல்லை. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

எதிர்கொள்ள முடியாத...

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் போனதற்கு அ.தி.மு.க.தான் காரணம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே என்று கேட்டனர். இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால்தான் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றார்கள் என்பதுதான் உண்மை. என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து