முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்கோ குரூப் பஞ்சாலை நிறுவனங்களுக்கான பொங்கல் விளையாட்டு விழா

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      விருதுநகர்
Image Unavailable

 ராஜபாளையம் - ராஜபாளையம்  ராம்கோ குரூப் பஞ்சாலைப் பிரிவைச் சேர்ந்த ராஜபாளையம் மில்ஸ்,ஸ்பின்டெக்ஸ்,டெக்ஸ்டைல்ஸ்,பெருமாள்பட்டி விஷ்ணு சங்கர் மில்ஸ்,ராம்கோ ஸ்பின்னர்ஸ்,சந்தியா மில்,சுப்பிரமணியபுரம் டெக்ஸ்டைல் பிரிவு உள்ளிட்ட ஏழு நிறுவனங்களுக்கான பொங்கல் விளையாட்டு விழா மனமகிழ் மன்ற விளையாட்டு திடலில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமையில் நடைபெற்றது.ராம்கோ குரூப் டிவிசன் இயக்குநர்கள் மற்றும் முதன்மை இயக்க அலுவலர் மோகன்ராம் கலந்து கொண்டனர்.முன்னதாக நூற்பாலைகளின் மனிதவள துணை தலைவர் நாகராஜன் வரவேற்று பேசினார்.ஹெச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் கண்ணன், ஐ.என்.டி.யூ.சி சங்க தலைவர் கண்ணன், ஏ.ஐ.டி.யூ.சி.விஜயன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.பரிசுகள் வழங்கி ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா பேசும் போது தற்போது பஞ்சாலை தொழிலில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலைகளை ஏதிர்நோக்குவதும், ஆலைகளை நவீனப்படுத்துவதும், மற்றும் மதிப்பு கூட்டபப்ட்ட தரமான நூல்களை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது குறித்து உரையாற்றினார்.   2018ம் வருடத்தில் 7நிறுனங்களில் ஊதிய இழப்பின்றி பணியாற்றிய 1453தொழிலாளர்களுக்கும், 295நாட்களிலும் மேலாக பணிபுரிந்து ஊதியம் ஈட்டிய 1225 தொழிலாளர்களுக்கும், ஆலையின் அனைத்து பிரிவுகளிலும் 40,35,30,25,வருடங்கள் பணி நிறைவு செய்த 87 தொழிலாளர்களுக்கும், ஊதிய இழப்பு இல்லாமல் அதிக வருடங்கள் வேலை செய்த 775தொழிலாளர்களுக்கும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் ராம்கோ குரூப் பஞ்சாலைகளுக்கு இடையிலான உற்பத்தி திறன், சுற்றுப்புறத்தூய்மை,செலவினங்கள் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் எக்ஸல் விருதினை ராஜபாளையம் மில்ஸ் நிறுவனத்திற்கும், இரண்டாவது பரிசு ராஜபாளையம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கும், மூன்றாவது பரிசு ஸ்ரீராம்கோ நிறுவனத்திற்கும், மேலும் இந்த ஆண்டு முதல் ஜப்பானிய தொழில்நுட்ப பயிற்சி விருது அறிமுகப்படுத்தப்பட்டு அதில் 5எஸ், டி.எம்.பி. செயல்பாடுகளில் ராம்கோ நூற்பாலைகளுக்கு கேடயம் வழங்கப்ட்டது.இதில் முதல் பரிசு விஷ்ணு சங்கர் மில்ஸ் நிறுவனத்திற்கும், இரண்டாம் பரிசு ராஜபாளையம் ஸ்பின்டெக்ஸ் நிறுவனத்திற்கும், மூன்றாவது பரிசு ராஜபாளையம் மில்ஸ்க்கும் வழங்கப்பட்டன.முடிவில் மேலாளர் செண்பகராமன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து