முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது எதிர்க்கட்சிகள் ஆதாரமாற்ற குற்றச்சாட்டு பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - கொடநாடு பிரச்சனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பழனி கோவிலுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
வரும் மக்களவை தேர்தலில் பா.ஜனதா வலிமையான கூட்டணி அமைத்து போட்டியிடும். தமிழகத்தில் 80 சதவீத இடங்களை பா.ஜனதா கூட்டணி கட்சிகள் கைப்பற்றும். ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றன. கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
தமிழக மக்களுக்காக மத்திய அரசு ஏதேனும் நல்ல திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கும் போது மக்கள் பிரதிநிதிகள்,  அரசியல் கட்சியினர் என்ற போர்வையில் மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்து எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதுடன் வேலைவாய்ப்பையும் தமிழக வாலிபர்கள் இழக்கும் நிலை ஏற்படுகிறது. தமிழகத்தில் தொழிற்சாலைகளை திறக்கக்கூட எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பின்புலமாக நின்று சில தீயசக்திகள் இயக்கி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும்.
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அவர் நேர்மையாக பணியில் ஈடுபட உதவ வேண்டும். பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேவையற்ற விமர்சனங்கள் செய்து வருகிறார். ஒரு மாநிலத்தையே சரியாக நிர்வகிக்க தெரியாத கெஜ்ரிவால் நாட்டையே சிறந்த முறையில் வழிநடத்தி செல்லும் மோடியை குறைகூற தகுதி இல்லாதவர் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து