முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராண்ட்மாஸ்டரான 12 வயது குகேஷ்

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : சென்னையை சேர்ந்த குகேஷ் என்ற 12 வயது சிறுவன் செஸ் விளையாட்டில் உலகளவில் மிக குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றவர்களில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

கடந்த வருடம் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா செய்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். அவரது நண்பரான குகேஷ். குகேஷ்ஷின் வயது 12 வருடம், 7 மாதங்கள், 17 நாட்கள் ஆகும். இந்திய அளவில் மிக குறைந்த வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றவர்களில் முதல் இடம் பிடித்துள்ளார் குகேஷ். உலகளவில் இரண்டாம் இடம். குகேஷ் ஏழு வயதில் இருந்து செஸ் ஆடி வருகிறார். அப்போது பள்ளி விடுமுறைக் கால பயிற்சியில் பங்கேற்ற குகேஷ்ஷின் ஆர்வத்தை பார்த்த அவரது பெற்றோர் ரஜினிகாந்த் மற்றும் பத்மா அவரை செஸ் அகாடமியில் சேர்த்து அவரது செஸ் திறமையை கூர் தீட்ட உதவினர். தற்போது கிராண்ட்மாஸ்டர் விஷ்ணு பிரசாத்திடம் பயிற்சி பெற்று வருகிறார் குகேஷ்.

உக்ரைன் நாட்டின் செர்ஜி கர்ஜாகின் 12 வயது, ஏழு மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதே உலகளவில் மிகக் குறைந்த வயது கிராண்ட் மாஸ்டர் பட்டம் ஆகும். அதை வெறும் 18 நாட்களில் தவற விட்டுள்ளார் குகேஷ். கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்ல மூன்று ஜி.எம்.நார்ம் வெற்றிகளை பெற வேண்டும். குகேஷ் தன் முதல் ஜி.எம் நார்ம் வெற்றியை 2018 பாங்காக் ஓபன் தொடரில் பெற்ற குகேஷ், இரண்டாவது ஜி.எம் நார்ம் வெற்றியை அண்டர் - 12 வேர்ல்ட் கேடட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெற்றார். இறுதியாக மூன்றாவது ஜி.எம் நார்ம் வெற்றியை 17-வது டெல்லி சர்வதேச ஓபன் செஸ் தொடரில் பெற்றார். இந்த பட்டத்தின் மூலம் இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் குகேஷ். இவரது ரோல் மாடல் செஸ் ஆட்டக்காரர்கள் புகழ்பெற்ற செஸ் ஆட்டக்காரர் பாபி பிஷ்ஷர் மற்றும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். விஸ்வநாதன் ஆனந்துடன் விரைவில் ஒரு போட்டியில் செஸ் ஆட வேண்டும் என்ற தன் விருப்பத்தை கிராண்ட்மாஸ்டர் வெற்றிக்கு பின் கூறினார் குகேஷ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து