முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டிஸ்சார்ஜ்

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சுவாசப் பிரச்சினை காரணமாக நுரையீரல் சிகிச்சைக்காக கடந்த திங்கட்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிறப்பு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரவி சங்கர் பிரசாத்தின் உடல்நிலை தேறியதையடுத்து, நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இதேபோல் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் என அனில் பலூனி எம்.பி. கூறியுள்ளார். முன்னதாக நேற்று காலை பா.ஜ.க.தேசிய பொதுச்செயலாளர் ராம் லால், காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறின் காரணமாக நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து