முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவக்கோட்டை கிராமத்தில் தைப்பொங்கல் விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசுகள் வழங்கினார்

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள நடுவக்கோட்டை கிராமத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
திருமங்கலம் அருகேயுள்ள நடுவக்கோட்டை கிராமத்து பொதுமக்கள் மற்றும் சைக்கிள் கிங் நண்பர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினவிழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 25வது ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடுவக்கோட்டை கிராமத்து மந்தையில் சிறப்பாக நடைபெற்றது.இதில் கயிறு இழுத்தல்,ஸ்லோ சைக்கிள் ரேஸ்,இளவட்ட கல் தூக்குதல்,கபடி உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும்இளைஞர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.மேலும் சாதிமத பேதமின்றி தமிழர் உணர்வினை போற்றி பாதுகாத்திடும் வகையில் நடத்தப்பட்ட இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிடும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.அப்போது மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆண்டிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள்,நடுவக்கோட்டை சைக்கிள் கிங் நண்பர்கள் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து