முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார்? இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இன்று மெல்போர்னில் மோதல்

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெறுகிறது.

சமநிலையில் தொடர்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டுவில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

விஜய் சங்கருக்கு வாய்ப்பு ?

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் இன்று (18-ந்தேதி) நடக்கிறது. கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 299 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். தமிழக ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆவாரா? என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் முகமது சிராஜ் ரன்களை வாரி கொடுத்தார். இதனால் அவர் இடத்தில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கலாம்.

ஒருநாள் தொடரை...

பேட்டிங்கில் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, டோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல மிடில் ஆர்டர் வரிசையில் தினேஷ் கார்த்திக் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். பந்து வீச்சில் புவனேஷ் வர்குமார், முகமது‌ஷமி நல்ல நிலையில் உள்ளனர். குல்தீப் யாதவ் பந்து வீச்சு சுமாராக இருப்பதால் அவர் இடத்தில் யசுவேந்திர சாஹல் இடம் பெறலாம். டெஸ்ட் தொடரை கைப்பற்றியது போலவே ஒரு நாள் தொடரையும் இந்திய அணி வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

கடுமையாக போராடும்...

பேட்டிங், மற்றும் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் ஷான்மார்ஷ், ஹேண்ட்ஸ் கோம், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ் ஆகியோரும், பந்து வீச்சில் ரிச்சர்ட்சன், பெகரன்டார்ப் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். டெஸ்ட் தொடரை இழந்த மாதிரி ஒரு நாள் தொடரை இழந்து விடக்கூடாது என்பதற்காக அந்த அணி வெற்றிக்கு கடுமையாக போராடும். இரு அணிகளும் இன்று மோதுவது 131-வது போட்டியாகும். இதுவரை நடந்த 130 போட்டியில் இந்தியா 46-ல், ஆஸ்திரேலியா 74-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. சோனிசிக்ஸ், சோனி டென் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மைதானம் ஒரு கண்ணோட்டம்

மெல்போர்ன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததில் இருந்து இதுவரை அங்கு 148 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 74 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 45 போட்டிகளை வெளிநாடுகள் வென்றுள்ளன. 3 போட்டிகள் மழை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே போட்டிகளை கணக்கிட்டால், மொத்தம் 14 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 6 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது. 9 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது.

இருப்பினும் இன்று முதலில் பேட்டிங் செய்யும் அணி வெல்லும் என்று கணிப்பிற்கு காரணமாக தற்போது உள்ள அணிகளின் நிலைகளைக் கொண்டும், மைதானம் அமைக்கப்படும் முறையைக் கொண்டும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக மைதானம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து