முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : மெல்போர்னில் இன்று நடக்கும் போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவும் வெற்றி...

ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

ஆடம் ஜம்பா...

இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபடும். ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் இடம்பிடித்திருந்தார். அவர் இரண்டு போட்டிகளிலும் 109 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. இதனால் இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய ஆடும் லெவன் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆடம் ஜம்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பில்லி ஸ்டேன்லேக்...

அதேபோல் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரேன்டர்ப் காயம் அடைந்துள்ளதால், பில்லி ஸ்டேன்லேக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), 2. அலெக்ஸ் கேரி (துணைக்கேப்டன்), 3. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 4. கவாஜா, 5. ஷான் மார்ஷ், 6. மேக்ஸ்வெல், 7. ரிச்சர்ட்சன், 8. பீட்டர் சிடில், 9. பில்லி ஸ்டேன்லேக், 10. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 11. ஆடம் ஜம்பா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து