முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புஜாராவை எந்தப் பந்துவீச்சாளரோ, கிரிக்கெட் பந்தோ வீழ்த்த முடியாது - கேப்டன் விராட் கோலி புகழாரம்

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்டு : புஜாராவை எந்தப் பந்துவீச்சாளரோ அல்லது கிரிக்கெட் பந்தோ வீழ்த்த முடியாது என இந்திய கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

வீழ்த்த முடியாது

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெற்ற வரலாற்று வெற்றியில் புஜாராவின் பங்கு குறித்து விராட் கோலி இந்திய கிரிக்கெட் வாரிய தொலைக்காட்சி பேட்டியளித்துள்ளார். அதில், “கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் ஒயிட் வால்கர் தான் புஜாரா. ஏனென்றால் அவரை கொல்ல நெருப்பு அல்லது சிறப்பு வாளால் மட்டுமே முடியும். அவரை எந்தப் பந்துவீச்சாளரோ அல்லது கிரிக்கெட் பந்தோ காயப்படுத்தி வீழ்த்த முடியாது” என்றார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்பது ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி ஒன்றில் வரும் தொடர் ஆகும். அதில் கதாபாத்திரமே ஒயிட் வால்கர் ஆகும்.

சொந்தத் திறமையால்...

அத்துடன், புஜாரா தனது சொந்தத் திறமையால் சாதித்தவர். அவர்கள் போட்டிகளில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. அவர் கிரிக்கெட் நிர்வாகம் கூறும் கருத்துகளை புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி தன்னை தயார்படுத்திக்கொண்டு விளையாடுவார். இங்கிலாந்து விளையாடும் போது அவர் பெற்ற அறிவுரைகளை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக திறம்பட வெளிக்கட்டினார். அவர் கூற விரும்பியதை பேட் மூலம் நிரூபித்துக் காட்டினார்” என கோலி கூறினார்.

கற்றுக்கொண்டோம்....

தொடர்ந்து பேசிய கோலி, “இது ஒரு வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியாகும். புஜாரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். களத்தில் பொறுமை மற்றும் நடந்துகொள்ளும் விதத்தை நாங்கள் அனைவரும் அவரிடம் கற்றுக்கொண்டோம். பொறுமையை கடைபிடிப்பது எப்படி என்பதை எங்களுக்கு புஜாரா கற்றுக்கொடுத்தார்” என கோலி புகழாரம் சூட்டினார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் புஜாரா 3 சதங்களுடன் மொத்தம் 521 ரன்களை புஜாரா குவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து