முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      சினிமா
Image Unavailable

புது டெல்லி, மும்பையில் கட்டப்பட்டுள்ள தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

மும்பை பிலிம் டிவி‌ஷன் வளாகத்தில் ரூ.140.61 கோடியில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. 19-ம் நூற்றாண்டு வரலாற்று அரண்மனையான குல்‌ஷன் மஹால் மற்றும் ஒரு புதிய கட்டிடம் என 2 கட்டிடங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு மேலான இந்திய சினிமாவின் வரலாற்றை புகைப்படங்கள், வீடியோ, கிராபிக்ஸ், கலைவடிவம் போன்ற பல்வேறு வழிகளில் ஒரு கதை போல் விளக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஷியாம் பெனகல் தலைமையிலான அருங்காட்சியக ஆலோசனை குழு இதனை வடிவமைத்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து