தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் 156-பிறந்த நாள் விழா அழகப்பா பல்கலைக்கழகத்தி;ல் கொண்டாடப்பட்டது

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      சிவகங்கை
19 alagappa news

 காரைக்குடி:-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயர் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் சார்பில் தேசிய இளைஞர் தினமும், சுவாமி விவேகானந்தரின் 156-வது பிறந்த தின விழாவும்; கொண்டாடப்பட்டது. 
 அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வ செயல்களைச் செய்யும் மனிதர்களை உருவாக்கி அதன்மூலம் நாட்டினை முன்னேற்றப் பாதையிலும், உலக அமைதியை ஏற்படுத்துவதுமே தான் கல்வியின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தார்.  இக்கருத்தை நினைவில் கொண்டு உலகில் அமைதியை ஏற்படுத்த இளைஞர்கள் இடையராது உழைக்க வேண்டும் என துணைவேந்தர் கேட்டுக்கொண்டார். 
 அவர் மேலும் பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.  நமது பண்பாடு உலகை ஒரே குடும்பமாகவே நாம் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளது என்பது சிறப்பானது.  இதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.  இளைஞர்களின் ஆற்றலில் தீவிரமான நம்பிக்கை கொண்டவர் சுவாமி விவேகானந்தர்.  இளைஞர்களால் எதையும் செய்ய முடியும் என்றும் நாட்டை உயர்நிலைக்கு அவர்களால் எடுத்துச் செல்ல முடியும் என்பதையும் உணர்ந்தே அவர்களுக்கு எண்ணற்ற அறிவுரைகளைக் கூறியுள்ளார்.  அவருடைய கருத்துகளை இளைஞர்கள் பின்பற்றி தாங்களும் வளர்ந்து, தங்களுடைய நாட்டையும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.  அறிவியலையும், ஆன்மிகத்தையும் இரு கண்களாக நாம் கருத வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார்.  மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற அவருடைய கருத்தை நாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.
 இந்நிகழ்ச்சியில் மதுரை சுவாமி விவேகானந்தா சேவா ஆசிரமத்தின் தலைவர் சுவாமி சதாசிவானந்த மகராஜ் சிறப்புரை ஆற்றினார்.  அவர் தமது உரையில், ஒவ்வொரு இளைஞரும் நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த மன நலம், சீரிய சிந்தனைகள், இவற்றோடு ஆக்கப்பூர்வ உழைப்பையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்ற விவேகானந்தரின் எண்ணத்தை எக்கணமும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என கூறினார்.  இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சமூக ஒற்றுமை, சமூக ஒருமைப்பாடு, சமூக வளர்ச்சி ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக அமைதியை நிலைநாட்டப் பாடுபடவேண்டும் என்றார். உலக அமைதி இன்றைய இளைஞர்களின் கையில் தான்; உள்ளது என்றும், உலக மக்களிடையே ஒரு இணக்கத்தை உருவாக்கவே மதங்கள் பாடுபடவேண்டும் என்றும், அனைத்து மதங்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையுமே போதிக்கின்றன என்றும் குறிப்பிட்டு  இக்கருத்தினை வலியுறுத்துவதாகவே விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு அமைந்து இருந்தது என்றார்.  அதுவே இன்று வரை உலகளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.  விவேகானந்தரின் சிந்தனைகளை செயலில்காட்டி நாட்டை வளப்படுத்த வேண்டும் என்ற உறுதி மொழியை இந்த நாளில் நாம் அனைவரும் ஏற்று செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.
 முன்னதாக சுவாமி விவோகனந்தா உயர் ஆராய்ச்;சி மற்றும் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. கே.ஆர். முருகன் வரவேற்புரை ஆற்றினார்.  துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.வசிமலைராஜா நன்றியுரை ஆற்றினார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து