முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்போர்ன் போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி யுவேந்திர சாஹல் சாதனை

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

பந்துவீச்சுக்கு சாதகமாக...

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புகழ் பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். காலையில் லேசாக மழை பெய்ததால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

சாஹல் அபாரம்...

இதை பயன்படுத்தி இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அசத்தினார். முதல் ஓவரிலேயே ஷான் மார்ஷ், கவாஜா ஆகியோரை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார். 10 ஓவர்கள் வீசிய சாஹல் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 6 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்றும், ஒட்டுமொத்தமாக 3-வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இதற்கு முன் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முரளி கார்த்திக்கும், மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் அஜித் அகர்கரும் 6 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளனர். தற்போது அவர்கள் வரிசையில் சாஹல் இணைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து