முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பெங்களூரு : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

224 ரன்கள்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் நடைபெற்ற 3-வது காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கார்நாடக அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பிஷ்னோய் 79 ரன்களும், கேப்டன் லாம்ரோர் 50 ரன்களும் அடித்தனர். கர்நாடக அணி சார்பில் மிதுன், கவுதம் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

வினய் குமார் ...

பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சில் விளையாடியது. ராஜஸ்தானின் துள்ளியமான பந்து வீச்சில் கர்நாடக பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினார்கள். ஆனால் 9-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் வினய் குமார் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் அடிக்க கர்நாடகா 263 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 39 ரன்கள் பின்தங்கிய நிலையில் ராஜஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. 2-வது இன்னிங்சிலும் ராஜஸ்தான் அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை. லாம்ரோர் 42 ரன்களும், பிஸ்ட் 44 ரன்களும் அடிக்க 222 ரன்னில் சுருண்டது.

ராஜஸ்தான் முன்னிலை...

இதனால் ராஜஸ்தான் அணி 183 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கர்நாடகா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 18 ரன்னுடனும், ரோனித் மோர் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

6 விக்கெட் வித்தியாசத்தில்...

நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மோர் மேலும் 3 ரன்கள் எடுத்து 8 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் கேப்டன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் அடிக்க கர்நாடக அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து