முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மந்திரி கொலை வழக்கில் ஜெர்மனியில் 14 ஆண்டுகளுக்கு பின் விடுதலைப் புலி கைது

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பெர்லின், இலங்கை முன்னாள் வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர் கடந்த 2005-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய விடுதலைப் புலி 14 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர். இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி கொழும்பில் உள்ள தனது பங்களாவில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலைக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் பொறுப்பு ஏற்றது. இதற்கிடையே 2009-ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோல்வி அடைந்தது. அதையடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் ஜெர்மனியில் விடுதலைப்புலிகள் உளவுப் பிரிவைச் சேர்ந்த நவனீதன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் இலங்கை முன்னாள் மந்திரி லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர். லட்சுமண் கதிர்காமர் கொல்லப்பட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைப்புலி கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியின் தனியுரிமை சட்டப்படி கைதான விடுதலைப்புலியின் உண்மையான பெயர் வெளியிடப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இவரை அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல முயன்றதாகவும் இவர் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து