முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்டில் பனிப்பொழிவுடன் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவும் குளிரும் நிலவுகிறது. இதற்கிடையே இமயமலையின் மேற்கு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை மேற்கு இமயமலை பகுதிகளான காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீரில் இன்று பனிப்பொழிவு மிக கடுமையாக இருக்கும் என்றும், பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. துருவப் பகுதியில் இருந்து மணிக்கு 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிக பட்சம் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் குளிர் காற்று வீசும் என்றும்,  டெல்லி, ஒடிசாவில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து