முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்பம் சார்ந்த 5,000 புதிய தொழில்கள் உருவாகும்: புத்தொழில் - புத்தாக்க கொள்கையை முதல்வர் எடப்பாடி வெளியிட்டார்

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 5 ஆயிரம் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில்கள் உருவாக்கவும், 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அந்த கொள்கை குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-2023 ன் நோக்கம் தொழில்நுட்பத்தின் மூலமாக புத்தாக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவதே ஆகும். தமிழ்நாடு இந்தியாவின் மிகப்பெரிய ‘அறிவுசார் மூலதனம் மற்றும் கண்டுபிடிப்புகளின் மையம்’ ஆக உருவாகுவதற்கு இக்கொள்கை வழிவகை செய்யும். இந்த கொள்கை புதிய கண்டுபிடிப்புகளையும் அதற்கேற்ற சூழலை உருவாக்கி புத்தாக்கத்திற்கும், அறிவாற்றலை வளர்ப்பதற்கும் துணை நிற்கும். அதனுடன் அறிவாற்றலை வளர்த்தல் பொருத்தமான கல்வி முறைகள், தொழில்நுட்ப வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான முதலீடுகளையும் பெருக்க உதவும். மேலும் கட்டமைப்பு, அறிவுசார் வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மனிதவள திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவித்து தொழில்முனைவோர் நிறுவனங்களின் உயர் வளர்ச்சியை உறுதி செய்யும். இதன் மூலம் விவசாயம், தொழில்துறை, சுகாதாரம், கல்வி, சமூகத்துறை, நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் தகவல் தொடர்பு என அனைத்து துறைகளிலும் புத்தொழில்கள் உருவாக தேவையான கட்டமைப்பு வசதிகள் உறுதி செய்யப்படும்.

புத்தொழில் முனைவோரின் புதுமையான எண்ணங்களுக்கு தொழில் வடிவம் கொடுக்க புத்தொழில் கொள்கை வழிவகை செய்யும். தமிழ்நாட்டினை உலகளாவிய புத்தாக்க மையமாகவும், புத்தொழில் முனைவோர்களுக்கான மிகச் சிறந்த தேர்விடமாகவும் 2023 க்குள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் துடிப்பான புத்தொழில் சூழலை உருவாக்குவதன் மூலம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் புத்தொழில்கள் 10 உலகளாவிய உயர் வளர்ச்சி புத்தொழில்கள் உட்பட 2023 க்குள் உருவாக்கப்பட்டு புத்தாக்கம் மற்றும் தொழில் முனைதலால் உந்தப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைய செய்யப்படும்.

தமிழகத்தில் குறைந்த பட்சம் 5 ஆயிரம் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில்கள் உருவாகிட தேவையான ஊக்கமும் ஆக்கமும் அளித்தல். துப்புரவு, உணவு, பசுமை ஆற்றல், சுகாதாரம், கல்வி போன்றவை சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய துறைகள். இத்துறைகளில் காணும் பிரச்சினைகளுக்கு புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வு காணும் வகையில் குறைந்தபட்சம் 10 உலகளாவிய உயர் வளர்ச்சி புத்தொழில்களுக்கு ஆதரவு அளித்தல்.போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், மின் மற்றும் மின்னணு, சுகாதாரம், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, பருவநிலை மாற்றம், நிதிநுட்பம், ஜவுளித்துறை, தகவல் தொடர்பு, இணையவிடங்கள், செயற்கை நுண்ணறிவு, இயந்திக் கற்றல், மென்பொருள் சார்ந்த சேவைப் பணிகள் போன்ற துறைகள் முன்னுரிமைத் துறைகளாக கண்டறியப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து