முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனிக்கு நிகரான வீரர் இல்லை: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம்

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய டோனியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி பாராட்டியுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு...

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி கூறியதாவது:- டோனிக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. அவருக்கு மாற்று கிடையாது. அவரை போன்ற வீரர்கள் 30-40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருவார்கள். ஆகவே தான் டோனி ஆடும் வரை அவரது ஆட்டத்தை ரசியுங்கள் என்று நான் இந்தியர்களிடம் சொல்கிறேன். அவர் இல்லையென்றால் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும்.

உருவாவது கடினம்...

ரிசப்பன்ட் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் விளையாட்டுக்கு ஒரு தூதராக நீண்டகாலம் இருப்பது போல் இன்னொருவர் உருவாவது கடினம். ரிசப்பன்டின் ஹீரோ டோனி தான். ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுகிறார். டெஸ்ட் தொடரின் போது அவர் டோனியிடம் நிறைய பேசியுள்ளார் என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்ட பரஸ்பர மரியாதை மிகப்பெரிய வி‌ஷயமாகும்.

எனது பணி எளிதாகிறது...

இதேபோல வீராட் கோலி- டோனி இடையேயான பரஸ்பர மரியாதை நம்ப முடியாத ஒன்றாகும். இதனால் ஓய்வு அறையில் எனது பணி எளிதாகிறது. வீரர்களின் ஆட்டத்தில் நான் அதிகம் தலையீடுவது இல்லை. தேவைப்பட்டால் சில வேளைகளில் ஆலோசனை வழங்குவேன். ஒரு வீரர் எதை பார்த்து பயப்படுகிறார் என்றால் நான் தலையில் தட்டி சரி செய்வேன். இந்த வி‌ஷயத்தில் நான் மோசமானவன். இல்லையென்றால் நான் பயிற்சியாளராக இருக்க முடியாது.
இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து