முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: அசத்திய புவனேஸ்வர்

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. பொதுவாக ஒரு தொடர் தொடங்குவதற்குமுன் இரண்டு பேரை ஒப்பிட்டு, அதில் ஜெயிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு கிளம்பும். அப்படித்தான் ஒருநாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் ஸ்விங் பந்தை ஆரோன் பிஞ்ச் எதிர்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. புவனேஸ்வர் குமார் பந்து வீச்சை சமாளித்து விட்டால், அதன்பின் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் புவேனஸ்வர் குமார் புதிய பந்தில் தனது ஸ்விங் திறமையால் ஆரோன் பிஞ்ச்-ஐ நடுங்க வைத்துவிட்டார்.

 சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் 6 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் புவனேஸ்வர் குமாரின் ஸ்விங் பந்தை சந்திக்க திணறிய ஆரோன் பிஞ்ச், க்ரீஸை விட்டு அதிக அளவு முன்னாள் வந்து தடுத்தாடினார். இரண்டு முறை ஸ்லிப் திசையில் பந்து எட்ஜ் ஆகியது. ஆனால் தப்பிவிட்டார். அதன்பின் புவனேஸ்வர் குமாரின் முதல் ஸ்பெல்லின் கடைசி பந்தில் ஆரோன் பிஞ்ச் சிக்கினார். இன்ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டானார். டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தியும் பலனில்லை. இதனால் 24 பந்துகளை சந்தித்து 14 ரன்னில் ஆட்டமிழந்தனார். இந்தத் தொடரில் ஆரோன் பிஞ்ச் புவனேஸ்வர் குமார் வீசியதில் 37 பந்துகளை சந்தித்தார். இதில் 30 பந்துகளில் ரன்கள் அடிக்கவில்லை. 7 பந்தில் 16 ரன்கள் மட்டுமே அடித்தார். 3 முறையும் அவுட்டாகியுள்ளார்.

எனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷாப் பன்ட். சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப், ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார். இந்தத் தொடரின் போது, ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் டிம் பெய்ன், ”ஒரு நாள் போட்டிக்கு டோனி வந்து விட்டார். நாம் இவரை ஹோபார்ட் ஹரிகேன்ஸ் (பிக்பாஷ் அணி) க்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பேட்ஸ்மேன் தேவை. ஹோபர்ட் அழகான சிட்டி. அங்கு இவருக்கு நல்ல அபார்ட்மென்ட்டை அளிக்கலாம். நான் என் மனைவியை சினிமாவுக் கு அழைத்துச் சென்றால் என் குழந்தைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கிண்டல் செய்தார்.

அடுத்து இந்தியா பீல்டிங் செய்யும்போது, ரிஷாப் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்.  ‘’நமக்கு இன்று சிறப்பு விருந்தினர் கிடைத்திருக்கிறார். மயங்க், நீங்கள் எப்பவாது தற்காலி கேப்டன்’ என்பதை கேள்விபட்டிருக்கிறீர்களா? பெய்னுக்கு பேசுவது மட்டுத்தான் பிடிக்கும். பேச்சு பேச்சு பேச்சுதான். அவரை அவுட் ஆக்க எதுவும் செய்ய வேண்டாம்’’ என்றார். இந்த கிண்டல் பற்றி இப்போது ரிஷாப்பிடம் கேட்டபோது, ‘’இதுதான் நான். என்னை யாராவது ஆத்திரப்படுத்தினால், நான் சரியான பதிலடி கொடுப்பேன். என் அணிக்காக நான் செய்ய வேண்டிய கடமை இருந்தது. அதோடு எனக்கான எல்லை எதுவென்று தெரியும். அதை மீற மாட்டேன். இந்த கிண்டலை ரசிகர்கள் ரசித்திருக்கிறார்கள். எனது அம்மாவும் சகோதரியும் கூட ரசித்தார்கள்’’என்றார்.

ஐசிசி-யிடம் ராயல்டி கேட்ட விநோதம்!

டோனியை புகழ்ந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி)  டபிள்யூ.டபிள்யூ.இ. (WWE) நிர்வாகி பால் ஹேமன் ராயல்டி கேட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 தொடர் டிராவில் முடிந்தது. பின்னர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது. இதனை அடுத்து நடந்த ஒரு நாள் தொடர் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என சமனில் இருந்தது. மெல்போர்னில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அந்நாட்டு மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று சாதித்தது.

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி 87 ரன்கள் எடுத்து அசத்தினார். அத்துடன், தொடர் நாயகன் விருதையும் அவர் வென்றார். டோனியைப் பாராட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தது. அதில், “சாப்பிடு, தூங்கு, போட்டியை வெல், அதையே திரும்பச் செய்” என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், ஐசிசி பதிவிட்ட ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு, டபிள்யூ.டபிள்யூ.இ நிர்வாகி பால் ஹேமன் ராயல்டி கேட்டுள்ளார். அவரது ட்விட்டரில், “WWE சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் #EatSleepConquerRepeat என்ற ஸ்லோகனை டோனியைப் புகழ ஐசிசி பயன்படுத்தியுள்ளது. அதனால், எங்களுடைய ராயல்டியை ரொக்கப் பணம், காசோலை மற்றும் பங்குகளாக செலுத்தலாம்” என்று கூறியுள்ளார். பால் ஹேமனின் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

புத்திசாலி கிரிக்கெட் வீரர் என்பதை நிரூபித்த டோனி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 4 ஓவர்கள் மீதமிருந்தபோது டோனி, கள நடுவரிடம் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 தொடர் டிராவில் முடிந்தது. பின்னர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது. இதனை அடுத்து நடந்த ஒரு நாள் தொடர் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என சமனில் இருந்தது. இரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நடந்தது.
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 4 பந்துகள் மீதமிருந்தபோது இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரையும் வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இந்திய அணியின் மூளையாகச் செயல்பட்ட டோனியின் புத்தாலித்தனத்தை காட்டும் விதமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. போட்டியின் 46-வது ஓவர் முடிந்ததும், தேனீர் இடைவேளை விடப்பட்டது.அப்போது, சகவீரர்கள் குளிர்பானங்கள் குடித்துக்கொண்டிருக்க டோனி மட்டும், நடுவரிடம் சென்று ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் யாருக்கெல்லாம் எத்தனை ஓவர்கள் மீதமுள்ளன என்பதை விசாரித்துக்கொண்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து