முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக மாற்றிய பாகிஸ்தான் பல்கலைக் கழகம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகம், காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக மாற்றி அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் மத்திய பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பைசலாபாத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக் கழகத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது அன்றைய தினத்தை சகோதரிகள் தினமாக கொண்டாட அந்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சகோதரிகள் தினத்தையொட்டி, அங்கு படிக்கும் மாணவிகளுக்கு துப்பட்டா மற்றும் முகத்தை மூடிக்கொள்ளும் துணிகள் தர அந்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக நன்கொடை கேட்டும் அப்பலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் ஜாபர் இக்பால் கூறுகையில், காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவானது.

காதலர் தினம் குறித்து இஸ்லாமிய மதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. நமது கலாச்சாரத்தின்படி பெண்களை தாய், சகோதரி, மனைவி என்றே போற்றி வந்துள்ளோம். ஆனால் இன்றைய இளைஞர்கள் நமது கலாச்சாரத்தை மறந்து மேற்கத்திய மோகத்துக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே தான் காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக அறிவித்து, அன்றைய தினம் இங்கு படிக்கும் மாணவிகளுக்கு துப்பட்டா மற்றும் முகத்தை மூடும் துணியை வழங்க முடிவு செய்துள்ளோம். இதனை பல்கலைக்கழக ஊழியர்கள் தான் வழங்குவார்கள் என்று அவர் கூறியுள்ளார். வேளாண் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் இளைஞர்கள் பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து