முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு: மாஸ்கோவில் பிரபல மாடல் அழகி கைது

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு விவகாரம் தொடர்பாக பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்பின் வெற்றிக்காகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்ற ஹிலாரி கிளிண்டன் தோல்விக்காகவும் ரஷ்யா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
ஆனால், டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்று பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் மாஸ்கோ விமான நிலையத்தில் ரஷ்ய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே ரஷ்ய உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாஸ்டியா ரிப்காவும், மேலும் 3 பேரும் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் அதனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நாஸ்டியா ரிப்காவுக்கும், அவரோடு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள 3 பேருக்கும் அதிக பட்சம் 6 வருட சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து