முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் பரிசு பொருட்களை ஏலம் விட மத்தியஅரசு திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு இதுவரை 1800-க்கும் அதிகமான பரிசுப் பொருட்கள் வந்துள்ளன. இந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுப் பொருட்களை இந்த மாதம் ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் அப்படியே, தூய்மை கங்கா பணிக்காகவும், கங்கை நதியை பாதுகாத்து புத்துயிர் பெற வைக்கும் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பரிசுப் பொருட்களை நேரடியாக 2 நாட்களும், இணையதளம் மூலம் 3 நாட்களும் ஏலம் எடுக்கலாம். இது குறித்து மகேஷ் சர்மா கூறுகையில், அடுத்த 10 முதல் 15 நாட்களில் இந்த ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த பரிசுப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுப் பொருட்கள் விரைவில் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து