இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் வென்று சாதிப்போம் ஜக்கையன் எம்.எல்.ஏ பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      தேனி
20 jakkayan news

தேனி -தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  உத்தமபாளையம் ஒன்றியம் பண்ணைப்புரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.ஆர்.பி.அழகுராஜா தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் பது என்ற லோகநாதன் வரவேற்றார்.; ஒன்றிய கழக செயலாளர்கள் கம்பம்  இளையநம்பி,  சின்னமனூர் விமலேஷ்வரன், நகர செயலாளர்கள் சின்னமனூர் ராஜேந்திரன், கம்பம் ஜெகதீஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், தலைமை கழக பேச்சாளர் வேதை சிவசண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 கம்பம் சட்டமன்ற உறுப்பினரும், கழக அண்ணா தொழிற்சங்க பேரவையின் கன்வீனருமான எஸ்.டி.கே. ஜக்கையன் பேசும்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தனது குழந்தை பருவத்தில் பசி, பட்டினியோடு வாழ்ந்தவர். அதனால் ஏழ்மை இருக்கக்கூடாது, வறுமை இருக்கக்கூடாது என்று எண்ணினார். நிஜ வாழ்க்கையில் சிகரெட், மது குடிப்பதில்லை. அதேபோல் திரைப்படங்களிலும் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். தனது திரைப்படங்கள் மூலம் தேசப்பற்று, மொழிப்பற்று, குடும்ப பாசம், உதவும் குணம் மற்றும் தன்னம்பிக்கையை உருவாக்குதல் என நாட்டு மக்களுக்கு நல்ல செய்திகளை எடுத்துரைத்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சாற்றால், எழுத்தாற்றல், சொல்லாற்றலால் ஈர்க்கப்பட்டு அவருடைய தலைமையை ஏற்றுக் கொண்டார். பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் உருவான திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளை, தனது படங்கள் மற்றும் படப்பாடல்கள் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்றார். மக்கள் அண்ணாவை பார்த்து எம்.ஜி.ஆர் கட்சியை சேர்ந்தவரா என்று கேட்கும் அளவிற்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் கட்சிக்காக உழைத்தார். அதனால் தான் அண்ணா எம்.ஜி.ஆரை எனது இதயக்கனி என்று போற்றினார். 1962ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 52 இடங்களை தி.மு.க பிடித்தது. எம்.ஜி.ஆரின் உழைப்பால், தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக இருந்த காங்கிரஸை தோற்கடித்து 1967ல் திமுக ஆட்சியை பிடித்தது. அதற்கு பின்னர் காங்கிரஸ் இன்றுவரை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தற்போதைய நிலையில் காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்காது. பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின் திருக்குவளையிலிருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து, எம்.ஜி.ஆர் தயவால் திமுகவின் தலைவரான கருணாநிதி பின்னர்  எம்.ஜி.ஆரையே கட்சியிலிருந்து நீக்கினார்.
                    ஊழலில் ஊறிப்போன கருணாநிதியின் குடும்பம் தற்போது உலக பணக்காரர்கள் வரிசையில் இருக்கிறது. ஊழல் பேர்வழிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றப்பட வேண்டுமென்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ல் அதிமுகவை உருவாக்கினார். 1977ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் சிறுவயதில் தான் பட்ட பசி கொடுமையை யாரும் படக்கூடாது என சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.
           மேலும் இலவச வேஷ்டி, சேலை, காலனி, பல்பொடி வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீட்டுக்கு இலவச ஒரு மின்விளக்கு திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்தார்.  இவருடைய திட்டங்களை பார்த்து யுனெஸ்கோ நிறுவனம் இவரை வெகுவாக போற்றியது, பாராட்டியது. புரட்சிதலைவரின் மறைவுக்கு பின் 30 ஆண்டுகளாக இரும்பு பெண்மணியாக இருந்து கழகத்தை கட்டிக்காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா 20 கிலோ அரிசி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன், தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி, பசுமைவீடு திட்டம் என மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து  எம்.ஜி.ஆரின் எண்ணங்களை, திட்டங்களாக மாற்றி சாதித்து காட்டினார். புரட்சித்தலைவியின் சிறப்பான செயல்பாட்டால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை கழகத்திற்கு பெற்றுக் கொடுத்தார். அவருடைய வழியில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மிகச்சிறப்பான ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், நீராபாரன திட்டம், பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்கவும், ஸ்மார்ட் சிட்டி திட்டம்  என புரட்சித்தலைவியின் திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளனர். தற்போது இல்லாத பொல்லாத வதந்திகளை பரப்பி கழக அரசு மீது குற்றச்சாட்டுகளை சிலர் கூறி வருகின்றனர். அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி மீண்டும் சாதிப்போம். நமக்கெல்லாம் இடைத்தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் எப்படி பணியாற்ற வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள்  எடுத்துரைத்து இருக்கிறார்கள். எனவே வரும்  இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வென்று சாதிப்போம்  என்று சிறப்புரையாற்றினார். ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கல்யாணக்குமார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ்,  ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, போடி சற்குணம், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, கூடலூர் சோலைராஜ், போடி பழனிராஜ், தேனி கிருஷ்ணகுமார்,  மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பிச்சைக்கனி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிவக்குமார், பண்ணைப்புரம் பேரூர் கழக அவைத்தலைவர் சுருளிராஜ், பொருளாளர் தமிழரசன், உத்தமபாளையம் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் விமல், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் தர்மேந்திரன், ஒன்றிய பாசறை செயலாளர் வினோத்குமார்,  நாகையகவுண்டன்பட்டி ஊராட்சி செயலாளர் வாஞ்சிநாதன், பல்லவராயன்பட்டி கிளை செயலாளர் மாயழகு, டி.மேட்டுப்பட்டி கிளை செயலாளர் மாடசாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பண்ணைப்புரம் பேரூர் கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து