முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படை விரட்டி பலியான மீனவர் குடும்பத்திற்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் இலங்கை கடற்படை விரட்டியதால் ஏற்பட்ட விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் திரு.க.முனியசாமியின் குடும்பத்தினருக்கு, இளந்தைக்கூட்டம் கிராமத்திலுள்ள அவர்களது வீட்டிற்கு நேரடியாக சென்று முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் உடனிருந்தார். இதன்பின்னர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து 12.01.2019 அன்று ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த 9 மீனவர்கள் இரு படகுகளில் அவர்களது பாரம்பரிய மீன்பிடிப்பகுதியான பாக் வளைகுடா பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.  13.01.2019 அன்று அதிகாலையில் அவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையினர் விரட்டியதில் இரு படகுகளும் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 8 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 
 ஆனால்; கருப்பையா என்பவரது மகன் க.முனியசாமி என்பவர் துரதிஷ்டவசமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார்.  அதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் க.முனியசாமியின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவிட்டார்கள். இந்நிலையில், உயிரிழந்த க.முனியசாமியின் உடல் கொழும்பிலிருந்து விமானம் மூலமாக திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, திருச்சியிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் வாகனத்தில் அவரது சொந்த ஊரான இளந்தைக்கூட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.  உயிரிழந்த மீனவர் க.முனியசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி பலியான மீனவரின் மகள் மு.சண்முகப்பிரியா என்பவரிடத்தில் நிவாரணத் தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.  இதுதவிர, மீன்வளத்துறை மற்றும் மீனவர்கள் நல வாரியம் மூலமாக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மீனவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் விதமாக, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு மத்திய அரசின் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.
 இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மீன்வளத்துறை துணை இயக்குநர் இ.காத்தவராயன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து