முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே மந்தை பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம், -  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திராபட்டியில் உள்ள மந்தை பகவதி அம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கோயிலின் முன் யாகசாலை அமைக்கப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன்  பூஜை தொடங்கியது. பின்னர் முதல் கால யாகபூஜையும்,இரண்டாம் கால யாகபூஜையும் நடந்தது. முன்னதாக இதில் காசி, இராமேஸ்வரம், கங்கை, அழகர்கோவில், காவிரி போன்ற புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் நிரம்பிய குடங்கள் வைக்கப்பட்டிருந்தது. இப்புனித தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி வந்தது. பின்னர் கோயிலின் உச்சியில் உள்ள கோபுர கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  வைத்து வேத மந்திரங்கள் முழங்க  கலசத்தில் புனித நீர் குடம், குடமாக ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது..  அப்போதுபக்தர்களுக்கு புனித நீர் மற்றும் பூஜை மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில்  சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சமுத்திராபட்டியைச் சேர்ந்த கோயில் காரணகாரர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து