Idhayam Matrimony

ஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 12-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அத்துடன் அவர் இந்த மாத இறுதி வரை நம்பர் ஒன் வீரராக நீடிப்பதை உறுதி செய்தார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-3, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் வைல்டு கார்டு வீரர் அலெக்ஸ் போல்ட்டை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) 7-6 (8-6), 6-1, 6-2 என்ற நேர்செட்டில் போர்ச்சுகல் வீரர் ஜாவ் ஜோய்சாவை வெளியேற்றி 7-வது முறையாக 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் டானில் மெட்விடேவ் (ரஷியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாப்லோ கார்ரினோ பஸ்டா (ஸ்பெயின்), போர்னா கோரிச் (குரோஷியா), லூகாஸ் பொய்லி (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

இதேபோல் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 4-வது சுற்றில் சிமோனா ஹாலெப்-செரீனா வில்லியம்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து