முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவின் பொருளாதார வளர்ச்சி 28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா, அமெரிக்காவுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்டதன் விளைவாக சீனாவின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது.  சீனாவின் தேசிய புள்ளியியல், இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு 6.8 சதவீதமாக இருந்தது. கடந்த 1990-ம் ஆண்டு 3.9 சதவீதமாக இருந்த பிறகு, தற்போது, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதர வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்கான சீனாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு 6.5 என்ற அளவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாக கருதப்படுகிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து இருப்பது சர்வதேச பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து