முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு: சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

துணை ஜனாதிபதி...

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் தமிழக விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு பேசுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிறைவுரையாற்றுகிறார்.

12 முன்னணி நிறுவனங்கள்...

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மற்றும் 10-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது.  2-வது முறையாக மீண்டும் நடக்கும் இம்மாநாட்டில் முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். மாநாட்டையொட்டி அமைக்கப்படும் 250-க்கும் மேற்பட்ட பொருட்காட்சி அரங்குகளில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாளர் நாடுகள் ஆகியோரின் தயாரிப்பு மற்றும் சேவைகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதில் மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாய வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற தொடர்புடைய 12 முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

கருத்தரங்கு...

மாநாட்டில் காலையில் ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்த முதலீட்டாளர்கள் கருத்தரங்கும், பகல் 2 மணி அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் கொரியா நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கும் நடக்கிறது. அதன் பின்னர் தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணி முதல் பெயர் பதிவு செய்யப்படும். 10 மணிக்கு மாநாடு துவக்கப்படும். தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி, புதிய வாய்ப்புகளைக் கண்டறிதல், எதிர்பார்க்கப்படும் சவால்களை சமாளித்தல் என்னும் தலைப்பில் கருத்தரங்கு பிற்பகல் 2 மணிக்கு துவங்கும்.

கல்வி-வேலைவாய்ப்பு...

எம்.எஸ்.சண்முகம் (தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக இயக்குனர்) வி.எஸ். பார்த்தசாரதி (மகேந்திரா குரூப்), வெங்கட்ரமணி (ஐ.பி. ரிங்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர்), அனந்த் கோயங்கா (சியாட் லிமிடெட் நிர்வாக இயக்குனர்), மைக்கேல் ப்ரீல்மெயர் (போர்டு மோட்டார்ஸ் தலைவர் நிர்வாக இயக்குனர்), ஆகியோர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் கல்வி முதல் வேலைவாய்ப்பு என்னும் தலைப்பில் 7 பேர் உரையாற்றுகிறார்கள்.

விருப்பமான இடம்...

ஏரோஸ்பேஸ் ராணுவ தொழில்களுக்கு விருப்பமான இடம் தமிழ்நாடு என்னும் தலைப்பில் ரமேஷ் சந்த் மீனா (டிட்கோ தலைவர்), ஆர். சுந்தரம் (சேலம் ஏரோ பார்க் தலைமை செயல் அதிகாரி), ஏர்மார்ஷல் எம். மாதேஸ்வரன் (ஓய்வு: பெனின்சுலா பவுண்டேஷன் தலைவர்), வினோத் சுரானா (சுரானா, சுரானா இன்டர்நேஷனல் அட்டர்னீஸ் தலைமை நிர்வாக அதிகாரி பங்குதாரர்) ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

பயோ டெக்னாலஜி பார்மசூட்டிக்கல்ஸ், மருத்துவக் கருவிகள் தயாரித்தல் என்னும் தலைப்பில் அபயக்குமார் ஜெயின் (வெங்கடநாராயணா ஆக்டிவ் இன்க்ரீடியன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்), டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு (ட்ரிவிட்ரான் ஹெல்த் கேர் (பி) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் நிர்வாக இயக்குனர்) உரையாற்றுகிறார்கள்.

சமீபத்திய போக்குகள்...

தமிழ்நாட்டில் தொழில்கள் நடத்துவதை எளிமைப்படுத்திய சமீபத்திய போக்குகள் என்னும் தலைப்பில் சந்தானம் (செயின்ட் கோபைன் கிளாஸ் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் நிர்வாக இயக்குனர்), கே.ராமசுவாமி ரூட்ஸ் குரூப் செயல் தலைவர் உள்ளிட்ட 7 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புக்காக உருவாகும் தொழில்நுட்பங்கள் என்னும் தலைப்பில் 6 பேர் உரையாற்றுகிறார்கள்.

வாய்ப்புகள் - சவால்கள்...

தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் சவால்களும் என்னும் தலைப்பில் ரமேஷ் சந்த் மீனா (டிட்கோ நிர்வாக இயக்குனர்) உள்ளிட்ட 6 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் உள் கட்டமைப்பு முன்னேற்றம் தனியார் ஈக்குவிட்டி, தனியார் கடன் உள்ளிட்ட முக்கிய நிதி குறித்த அம்சங்கள் பற்றி 6 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான மையம் முன்னோட்டப் பாதை என்னும் தலைப்பில் கார்த்திக் ஆத்மநாதன் (ஈ.வி & ஈ மொபிலிட்டி சொல்யூஷன்ஸ், அசோக் லேலண்ட் லிமிடெட் தலைவர்) உள்பட 7 பேர் உரையாற்றுகிறார்கள்.

2-ம் நாள் மாநாடு...

கொரியா குடியரசு நாடு கருத்தரங்கில் தீபக் பரத்வாஜ் (சாம்சங், இந்தியா துணைத் தலைவர்) உள்ளிட்ட 5 பேர் உரையாற்றுகிறார்கள். அடுத்து 24-ம் தேதி 2-ம் நாள் மாநாடு துவங்குகிறது. தொழில்துறை கட்டமைப்பில் தொழில்துறை காரிடார் கட்டமைப்பில் தமிழ்நாட்டின் புதிய பரிமாணம் என்னும் தலைப்பில் 6 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் மதம் சுகாதாரம் பாரம்பரியம் சுற்றுலா ஆகிய துறைகளில் முதலில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் இந்து, அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் உள்பட 8 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டை எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி கேந்திரமாக மாற்றுதல் என்னும் தலைப்பில் அறிவியல் தொழில்நுட்ப துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு உள்பட 6 பேர் உரையாற்றுகிறார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்...

தமிழ்நாட்டில் வேளாண் உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் வாய்ப்புகள் குறித்த உரையாடல் நடைபெறுகிறது. இதே போல தமிழ்நாட்டில் ஜவுளித் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள், கட்டிட நிர்மாணம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து 10 பேர் உரையாற்றுகிறார்கள். சேமிப்புக் கிடங்கு துறை மற்றும் சென்னை அடுத்த தலைமுறைக்கான நிதிவள கேந்திரமாக உருமாற்றுதல் என்னும் தலைப்பில் 15 பேர் உரையாற்றுகிறார்கள். பிற்பகல் 3 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. அதையடுத்து நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து