முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா? துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : சென்னை தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தியதாக மு.க.ஸ்டாலின் கூறியதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்துள்ளார். மேலும், அவர் மூட நம்பிக்கையை நம்புகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதல்வர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, யாகம் நடத்தியதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

அரசியல் லாபத்திற்கு...

தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம். அது போல சாமி கும்பிட்டேன். யாகம் நடத்தவில்லை. யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்றால், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் யாகம் நடத்தலாமே ? யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்ற மூட நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் நம்புகிறாரா ? எந்த பக்கம் தாவினால் அரசியல் லாபம் கிடைக்கும் என நினைத்து மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

மக்கள் எங்கள் பக்கம்...

அம்மா அறிவித்த மக்கள் நல திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். எனவே, மக்கள் முழுமையாக 100-க்கு 100 எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது தேர்தலின்போது தெரியும். எந்த தேர்தல் வந்தாலும், மக்கள் எங்களுக்கு மகத்தான வெற்றியை அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து