முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -:பழனி முருகன் கோவிலில் அரோகரா கோஷம் விண்ணைப் பிழக்க தைப்பூசத் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசத் திருவிழாவாகும். இத்திருவிழாவின் முக்கிய நோக்கமே பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதோடு பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்துவது தான். இவ்வருடத்திற்கான திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மு;த்துகுமாரசாமி, வள்ளி - தெய்வானை தினந்தோறும் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தைப்பூசத் திருவிழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் வெளிப்பிரகாரத்தில் மலர்களால் திருமண மேடை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்நதது. அதில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அவர்களுக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்யப்ட்டு மகா தீபாதாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க மங்கல நாண் வள்ளி - தெய்வானைக்கு அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மு;த்துகுமாரசாமி, வள்ளி - தெய்வானையுடன் தோளுக்கினியாள் வாகனத்தில் எழுந்தருளி சண்முகநத்pயில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின பெரியநாயகி அம்மன் கோவில் வந்தார்.
முன்னதாக காலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்;னீர்செல்வம் தனது குடும்பத்துடன் பழனி மலைக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவரை முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, சுப்புரத்தினம், நகர செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்று மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றனர். துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மாலையில் தேர்க்கால் பார்த்தல், திருத்தேரேற்றமும் அதனை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ், உட்பட முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, ஞானதண்டாயுதபாணிக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பினர். பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைப் பிழக்கும் வகையில் எதிரொலித்தது.
தைப்பூசத் தேரோட்டத்தைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வந்திருந்தனர். பாதயாத்திரையாகவும் வாகனங்கள் மூலமாகவும், பேருந்து மற்றும் ரயில் மூலம் வந்த பக்தர்கள் பழனியில் குவிந்ததால் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது, பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது. பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் வழிநெடுகிலும் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்புக்கான மதுரை, தேனி. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தைப்பூசத் தேரோட்டத்தை முன்னிட்டு திண்டு;க்கல் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் தமிழகத்தில் திருச்செந்தூர் உட்பட அறுபடை வீடுகளிலும் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து