முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை ஹாலெப்-பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறினார்.

முதல் செட்டில்...

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.  பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்-பை (ருமேனியா) எதிர்க்கொண்டார். சிமோனா ஹாலெப்-செரீனா வில்லியம்ஸ் பலப்பரீட்சை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இருவரும் மோதிய ஆட்டத்தால் மைதானத்தில் அனல் பறந்தது என்றே சொல்லலாம்.அதிரடி, ஆவேசத்துடன் களமிறங்கிய செரீனா வில்லியமஸ் 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை தனதாக்கினார்.

3-வது செட்டில்...

பின்னர் இண்டாவது செட் ஹாலெப் வசம் சென்றது. இதனையடுத்து ஆட்டம் வெற்றியை நிர்ணயம் செய்யும் மூன்றாவது செட்டிற்கு சென்றது. இதிலும் இருவருக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. ஆனால் வெற்றி செரீனாவிற்கு சென்றது. 6-4 என்று செட்டை கைப்பற்றிய செரீனா போட்டியை வசப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த வருடம் செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்றுக்கொண்ட காரணத்தால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடவில்லை. குழந்தை பிறந்த பின்னர் அவர் விளையாட தொடங்கினார். பிரஞ்சு ஓபன் டென்னிஸ், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளில் இறுதிப்போட்டியை எட்டவில்லை. இப்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து