முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நவ்மி ஒசாகா, எலீனா சுவிட்டோலினா ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

4-வது சுற்று வரை...

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நான்காம் நிலை வீராங்கனையான நவ்மி ஒசாகா (ஜப்பான்)- சுலெஸ்டானா (லாத்வியா) மோதினார்கள். இதில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் சுவஸ்டோவாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். கடந்த முறை 4-வது சுற்று வரை நுழைந்ததே இதற்கு முன்பு சிறந்ததாக இருந்தது.

2-வது முறையாக...

ஒசாகா கால்இறுதியில் 6-வது வரிசையில் இருக்கும். எலீனா சுவிட்டோலினாவை (உக்ரைன்) சந்திக்கிறார். அவர் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கெய்சை 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். சுவிட்டோலினா தொடர்ந்து 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். மற்ற கால்இறுதி ஆட்டங்களில் சுவிட்டோவா (செக்குடியரசு)- பேர்ட்டி (ஆஸ்திரேலியா), அனஸ்டசியா (ரஷியா)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து