முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனியால் உறைந்ததால் விமான கதவு திறக்க முடியவில்லை - பயணிகள் 16 மணி நேரம் தவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

மாண்ட்ரியல் : கனடாவில் விமானத்தின் கதவு பனியால் உறைந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால், உள்ளே இருந்த பயணிகள் 16 மணி நேரம் குளிரில் தவித்தனர்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து ஹாங்காங்குக்கு விமானம் 250 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்த போது ஒரு பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே விமானத்தை கனடாவில் உள்ள நியூ பவுண்டுலேண்டு என்ற இடத்தில் விமானி அவசரமாக தரை இறக்கினார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையடுத்து விமானம் புறப்படத் தயாரானது. ஆனால் கடும் பனி கொட்டியது. தட்பவெட்ப நிலை மைனஸ் 30 டிகிரி ஆனது. எனவே விமானம் இயங்காமல் என்ஜின் கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் கதவு பனிப்பொழிவால் உறைந்து விட்டது. இதனால் கதவை திறக்க முடியவில்லை. பயணிகளால் வெளியே செல்ல முடியாமல் பட்டினியால் அவதிப்பட்டனர். போர்த்திக்கொள்ள மெல்லிய கம்பளி மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் விமானத்துக்குள்ளேயே 16 மணி நேரம் கடும் குளிரில் நடுங்கியபடி அவதிப்பட்டனர்.

சிறிது நேரம் கழித்து காபி மற்றும் நொறுக்கு தீனி வழங்கப்பட்டது. பொழுது விடிந்த பிறகு வெயில் பட்டதும் விமானத்தின் கதவு திறக்க முடிந்தது. அதன் பின்னர் பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேறி பஸ் மூலம் வேறு விமானத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். மதியம் அவர்கள் மீண்டும் அமெரிக்காவின் நெவார்க் நகருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து