முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துளசி கப்பார்டை தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் சென்னை டாக்டர் மகளும் போட்டி

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக 54 வயதான அமெரிக்க - இந்தியரான கமலா ஹாரீஸ் அறிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த டாக்டர் ஷியாமளா கோபாலன், 1960-ல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றார். அங்கு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியராக இருந்த கறுப்பர் இனத்தை சேர்ந்த ஹாரீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ். தற்போது ஜனநாயக கட்சியின் செனட்டராக இருக்கும் கமலா, கலிபோர்னியா அட்டர்னி ஜெனராலாகவும் இருந்தவர். தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்து வருபவர்.
கலிபோர்னியாவில் இருந்து செனட்டுக்கு முதன்முறையாக கடந்த 2016-ல் தேர்வு செய்யப்பட்டவர் கமலா. இவரது வரவால், இந்தியவர்கள் உள்பட பல்வேறு இனத்தவர்கள், இளைஞர்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதி, நாகரீகம், சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவை தான் இப்போதைக்கு அமெரிக்கர்களுக்கு தேவை. அதற்காக நான் பாடுபடுவேன் என்று கமலா தெரிவித்துள்ளார். ஏற்கனவே துளசி கப்பார்டு என்ற அமெரிக்க இந்திய பெண்ணும் அதிபர் போட்டியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து