முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 2000, ரூ. 500, ரூ. 200 இந்திய நோட்டுகளை வர்த்தக ரீதியாக பயன்படுத்த நேபாளம் தடை

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

காத்மண்டு : இந்தியாவின் ரூ. 2000, ரூ.500, ரூ. 200 நோட்டுகளை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்று நேபாள அரசு வங்கியான நேபால் ராஷ்டிரா வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேபாள் ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுற்றுலாப் பயணிகள், வங்கிகள், வணிக ரீதியான நிறுவனங்கள் ரூ.100 மதிப்புக்கு அதிகமான இந்தியாவின் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளைப் பயன்படுத்த நேபாளத்தில் தடை செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.இந்தச் செய்தியை காத்மண்டு போஸ்ட் செய்தி நிறுவனமும் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக நேபாளத்துக்குச் சுற்றுலா வரும் இந்தியப் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்த போது, நேபாளத்தில் கோடிக்கணக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தேங்கி விட்டன. அந்த நோட்டுகளை இதுவரை மத்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து