முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமணப் பரிசாக பா.ஜ.க.வுக்கு வாக்கு கோரிய மணமக்கள்- வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

சூரத், திருமண அழைப்பிதழில் திருமணப் பரிசாக வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கக் கோரிய மணமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நேற்று மணமுடித்த  சூரத்தைச் சேர்ந்த யுவராஜ் போகர்ணா மற்றும் சாக்‌ஷி அகர்வாலுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், " திருமண பந்தத்தில் இணையும் யுவராஜ் - சாக்‌ஷி மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

திருமணத்துக்கு வரவேற்று கொடுக்கப்பட்டிருந்த அழைப்பிதழில் ஒரு முக்கிய அம்சத்தைப் பார்த்தேன். உங்கள் புத்திக்கூர்மை உங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தியிருக்கிறது. இது என்னை இத்தேசத்துக்காக இன்னும் கடினமாக உழைக்க உந்துகிறது. உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கட்டும்" எனக் வாழ்த்தியிருக்கிறார். பிரதமரின் கையொப்பமும் அந்தக் கடிதத்தில் இருக்கிறது.

இது தொடர்பாக மணமகன் கூறும்போது, "பிரதமர் மோடி எங்களது செய்கையை கவனித்து பாராட்டியிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த அழைப்பிதழ் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மக்களுக்கு நிலவும் பல்வேறு சந்தேகங்களையும் பூர்த்தி செய்யும்" என்றார். மணமகள் சாக்‌ஷி அகர்வால் கூறும்போது, "நாங்கள் திருமண அழைப்பிதழில் இத்தகைய கருத்தை வெளியிடக் காரணமே, பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ரபேல் உண்மைகளை விளக்க வேண்டும் என்பதற்காகவே" என்றார்.

திருமண அழைபிதழில் இப்படி மோடிக்கு வாக்களிக்கக் கோரப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. முன்னதாக சூரத்தைச் சேர்ந்த தவால் - ஜெயா தம்பதியும் இதேபோல் தங்களது திருமண அழைப்பிதழில் திருமணப் பரிசாக வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் எனக் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து