முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் ஒன்றியத்தில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கோலப்போட்டி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசுகள் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம்  ஒன்றியத்தில் நடைபெற்ற மாபெரும் கோலப் போட்டியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கு கழக அம்மா பேரவை செயலாளரும்,தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பரிசுகளை நேரில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில்திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியத்தில் கோலப்போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.அப்போது திருமங்கலம்   ஒன்றியத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களது வாசல்களில் இரட்டைஇலை கோலமிட்டும் வீதிகளில் அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் படத்தை கோலங்களாக இட்டும்  தங்களது திறமைகளை   வெளிப்படுத்தினார்கள்.இதையடுத்து கோலப்போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும்,சாதனை படைத்தவர்களுக்கும் கழக அம்மா பேரவை சார்பில் பரிசுகள் வழங்கப்படுமென தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்திருந்தார்.இதையடுத்து அமைச்சரின் அறிவிப்பின்படி திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிசல்பட்டி,ராயபாளையம்,மீனாட்சிபுரம்,ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டிகளில் பங்ககேற்று சிறப்பாக கோலமிட்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கும் பார்வையாளர்களாக பங்கேற்ற ஆண்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசாக அழகிய ஹாட்பாட் பாத்திரங்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,முன்னாள் எம்.எல்.ஏ.,பாண்டியம்மாள்,மாவட்ட துணைச் செயலாளர்கள் பஞ்சவர்ணம்,பஞ்சம்மாள்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர்திருப்பதி, திருமங்கலம்ஒன்றிய செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,திருமங்கலம் ஒன்றிய அவைத் தலைவர் அன்னக்கொடி,துணைச் செயலாளர்கள் சுகுமார்,சுமதிசாமிநாதன், புளியங்குளம் கிளைக் கழகச் செயலாளர் கட்டாரி வேல்முருகன், பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம்,பழனிசாமி,சிவஜோதி தர்மர்,பிச்சைமணி,கபிகாசிமாயன், சிவன்காளை மற்றும் வழக்கறிஞர்கள் பாசறை முத்துராஜா, வெங்கடேஸ்வரன், ராஜசேகர்,நாகலட்சுமி, மீனாலட்சுமி,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து