முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் கடல்பகுதியில் தீவிரவாதி போர்வையில் ஊடுருவிய 11 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,-: இந்திய கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு போலீஸார்கள்  இணைந்து ராமேசுவரம் கடலோரப்பகுதியில்  சி-விஜில் என்ற  ஆப்ரேஷன் நடத்தியதில்  தீவிரவாதி போர்வையில் ஊடுருவிய 11 பேரை நேற்று கைது செய்தனர். 
     இந்தியா முழுவதும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும்,அந்நிய நாட்டு தீவிரவாதிகள் ஊடுருவதை தடுப்பதற்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆனையின் படி இந்திய முழுவதும் கடலோரம் மற்றும் மலைப்பகுதிகளில் சி- விஜில் என்ற தலைப்பில் பாதுகாப்பு ஆப்ரேசன் நேற்றும் மற்றும்  இன்று   நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ராமேசுவரம் தீவு பகுதிகளில் மன்னார்வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் இன்று காலை முதல் சி- விஜில் ஆப்ரேசன் நடைபெற்றது.இந்த ஆப்ரேசனில் தமிழக கடலோரப்பாதுகாப்பு போலீஸ் குழுமம் அதிவிரைவு ரோந்து படகில் பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் உள்பட  உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடலோரப்பகுதிகளில் மணல்திட்டுகளில்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.அதுபோல இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, மத்திய, மாநில  உளவுப்பிரிவு போலீஸார்கள் கடலோரப்பகுதிகளில் தீவிர சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.அதுபோல ராமேசுவரம் திருக்கோவில்,பாம்பன் ரயில் ,சாலைப்பாலம் ஆகிய பகுதிகளில் ராமேசுவரம் கியூ பிரிவு போலீஸார்கள் கண்காணித்து வந்தனர். இதனால் ராமேசுவரம் தீவு கடலோரப் பகுதிகள் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மெரைன் போலீஸார்  மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியான  தங்கச்சிமடத்தில்  இருந்து இரண்டு நாட்டிகள் கடல் மையில் தூரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சங்தேகத்திற்கு இடமாக சென்ற விசை படகை விரைந்து சென்று மடக்கி பிடித்தனர்.பின்னர் படகில் சோதணையிட்டபேது மறைந்திருந்த  ஏழு பேரை கைது செய்து மண்டபம் கடலோரக் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது விராணையில் அவர்கள் பாம்பன் சாலைப்பாலம்; மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் குண்டு வைப்பதற்காக வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் இதே போல் ராமேசுவரம் நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நான்கு பேரை  பிடித்து விசாரித்தில் அவர்கள் குண்டு வைக்க வைந்தது தெரிய வந்தது.அவர்களையும் போலீஸார்கள்  கை செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரனை மேற் கொண்டனர். அப்போது    விசாரணையில் அவர்கள் 11 பேரும்  சென்னையிலிருந்து வந்த இந்திய கடற்படை மற்றும் கமான்டோ படையினை சேர்நதவர்கள் எனவும்,மும்பை குண்டு வெடிப்பு நடைபெற்று பத்து ஆண்டுகளுக்கு பின்    இந்திய அளவில்   சி- விஜில் ஆப்ரேசன் என்ற தலைப்பில் பாதுகாப்பு ஒத்திகைக்காகவும்,விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீவிரவாதிகள் போல் ஊடுருவியதாகவும் தெரிவித்தனர்.இது குறித்து போலீஸார்கள் தெரிவித்தது.    மேலும் ஆண்டுக்கு ஒரு முறை மத்திய உள்துறை அமைச்சகம் இது மாதிரியான ஆப்ரேசனை நடத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவத்தி வருகிறது. அதே போல இந்த ஆண்டில் சி- விஜில் ஆப்ரேஷன் இன்று தொடங்கி; இன்று மாலை வரை தொடரும் எனவும், கடலோரப் பகுதிகளில் யாரேனும் அன்னியர்கள் தென்பட்டால் தகவல் கொடுக்க மீனவர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து