முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை: 12-ம் தேதி ஆஜராக சோனியா மருமகன் வதேராவுக்கு சம்மன்

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக வரும் 12-ம் தேதி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஸ்லைலைட் ஹாஸ்பிடா லிட்டி எனும் நிறுவனத்தையும் வதேரா நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பங்கு தாரர்களாக அவரது தாயார் மவுரீன் வதேராவும் இருக்கிறார். இந்த நிறுவனம் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு நிலம் வாங்கப்பட்டதில் வதேரா முறைகேடு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது சோனியாவின் மருமகன் வதேரா சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்து இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ராஜஸ்தான் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ராபர்ட் வதேரா மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை முயற்சி செய்த போது ராஜஸ்தான் ஐகோர்ட்டு அதற்கு தடை விதித்தது.

நேற்று முன்தினம் இந்த தடையை ராஜஸ்தான் ஐகோர்ட்டு விலக்கிய நிலையில் மேலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக வரும் 12-ம் தேதி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு வரும் வதேராவை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால் வதேராவை கைது செய்யக் கூடாது என்று ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எனவே வருகிற 12-ம் தேதி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜர் ஆவார் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து