முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ரதசப்தமி விழா வரும் 12-ம் தேதி நடக்கிறது

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி : திருப்பதியில் ஆண்டுதோறும் ரத சப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகள்...

12-ம் தேதி ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார். இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது. ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தேவஸ்தானம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. ரதசப்தமி அன்று நடைபெறவுள்ள வாகன சேவைகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

சந்திரபிரபை வாகனம்...

அதன்படி அன்றைய தினம் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனம். காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசே‌ஷ வாகனம். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம். மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம். இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம் போன்ற வாகனங்களில் ஏழுமலையான் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து