முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் - சந்திரபாபு, மாயாவதி கோரிக்கை

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து பாராளுமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என  சந்திரபாபு நாயுடு, மாயாவதி கூறியுள்ளனர்.

சட்டப்பூர்வ நடவடிக்கை

அமெரிக்காவை சேர்ந்த மின்னணு தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜா இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது என்றும் அவர் கூறி இருந்தார். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி, தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்க வேண்டும். 2014 பாராளுமன்ற தேர்தலில் வழக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்து பா.ஜ.க. வெற்றி பெற்றதாக லண்டனில் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலந்து ஆலோசிப்போம்....

உடனடியாக பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் மாற வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் விரைவில் ஒன்றுகூடி, வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்தும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் எந்திரம் தொடர்பாகவும் கலந்து ஆலோசிப்போம். நாங்கள் நவீன தொழில் நுட்பத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்று தெரிவித்தார்.

வெட்ட வெளிச்சமாக்கி...

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்கள், அதன் மீதான சந்தேகத்தை மேலும் வலுவாக்கி உள்ளது. எனவே எதிர்காலத்தில் நடக்க உள்ள அனைத்து தேர்தல்களையும் வாக்குச்சீட்டு முறையில் நடத்துவது சிறப்பாக இருக்கும். குறிப்பாக பாராளுமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும். பா.ஜ.க.வின் சதியை இந்த தகவல் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து