முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்.

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

அலங்காநல்லூர்,-  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்  தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2018-19 ம் ஆண்டுக்கான கரும்பு அரவை, ஆலையின் இயந்திர பகுதியில்  நேற்று காலையில் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆலையின் நிர்வாக குழு தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாககுழு உறுப்பினர்கள், ஆலையின் உயர் அதிகாரிகள் கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள்  பழனிச்சாமி, மொக்கமாயன், அழகர்சாமி, அப்பாஸ், மற்றும் விவசாயிகள் ஆலை தொழிலாளர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிர்வாக மேலாளர் ரெக்ஸ் வரவேற்றார். அலுவலக மேலாளர் பாலன் நன்றி கூறினார்.
ஆலையின் செய்தி குறிப்பில், கூறியிருப்பதாவது: கடந்த 2017-18 ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 2300 ஏக்கர் வரை பதிவு செய்யப்பட்டது. இதில் 38 ஆயிரம் டன்கள் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு, 34 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பு வருடமான  2018-19 ம் ஆண்டு 2300 ஏக்கர் வரை கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உத்தேசமாக சுமார் 60 ஆயிரம் டன் வரை அரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி பதிவு செய்யாத கரும்புகளையும், மற்றும் செங்கல்வராயன், பெரம்பலூர் தஞ்சாவூர் ஆகிய சர்க்கரை ஆலையிலிருந்து 40 ஆயிரம் டன் வரை வரவழைக்கப்பட்டு அரைப்பதற்கும், இதன் மூலம் 95 ஆயிரம் குவிண்டால் வரை சர்க்கரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துவகை மானியங்களையும், சலுகைகளையும் பெற்று தருவதற்கு ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(1,2)பட விளக்கம்: அலங்காநல்லூர்  தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2018-19 ம் ஆண்டுக்கான கரும்பு அரவை, மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில், நிர்வாக குழு தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து