முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

காயத்தால் விலகல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் - 8-ம் நிலை வீரரான கெய் நிஷிகோரி பலப்பரீட்சை நடத்தினார்கள். முதல் செட்டை எந்தவித சிரமமின்றி ஜோகோவிச் 6-1 எனக்கைப்பற்றினார். 2-வது செட்டில் ஜோகோவிச் 4-1 என முன்னிலையில் இருக்கும்போது நிஷிகோரி காயத்தால் விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

லூகாஸ் பவுலி வெற்றி

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மிலோஸ் ரயோனிக் - லூகாஸ் பவுலி மோதினார்கள். இதில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை லூகாஸ் பவுலி 7(7)-6(4) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். ஆனால் ‘டை பிரேக்கர்’ வரை சென்ற 3-வது செட்டை ரயோனிக் கைப்பற்றினார். 4-வது செட்டை பவுலி 6-4 எனக்கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து